தேசிய செய்திகள்

பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி அலைக்கற்றைக்கான உரிமம் வழங்க அரசு பரிசீலனை - பி.எஸ்.என்.எல் இயக்குநர் தகவல்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றைக்கான உரிமம் வழங்கும் முடிவு பற்றி அரசு பரிசீலித்து வருவதாக பி.எஸ்.என்.எல். இயக்குநர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தகவல் தொடர்பு சேவை வழங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடந்த ஆகஸ்ட் மாதம், பி.எஸ்.என்.எல். இயக்குநர் அரவிந்த் வத்னேர்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த் வத்னேர்கர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்களை விற்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகளை விற்று அதன் மூலம் 8,500 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளதாகவும் அந்த கடித்தத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றைக்கான உரிமம் வழங்கும் முடிவு பற்றி அரசு பரிசீலித்து வருவதாக எம்.பி. ரவிக்குமார் எழுதிய கடிதத்திற்கு பி.எஸ்.என்.எல். இயக்குநர் பதிலளித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்