கேரள அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதை தொடர்ந்து மாணவர்களுக்கான பயண சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை சுமார் 966 கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகத்தின் புதிய வழிகாட்டுதல் படி, வருமான வரி செலுத்தும் பெற்றோரின் குழந்தைகளுக்கான பயண கட்டணத்தில் சலுகை இல்லை எனவும், பி.பி.எல் பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச கட்டணம் ஏற்பாடு செய்யப்படும் எனவும், 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.