தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்களை அறிவிக்க மத்திய அரசு திட்டம்

நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்களை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

யோகா தின விழாவை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்களை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெறும் மிகப்பிரம்மாண்டமான யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

150 நாடுகளில் உள்ள இந்திய துதரங்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறது. பாரீசின் ஈபிள் டவர், லண்டனில் உள்ள டிராபல்கர் சதுக்கம், நியூயார்க்கில் உள்ள செண்ட்ரல் பார்க் ஆகிய இடங்களில் யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோவில் பிரதமர் கலந்து கொள்ளும் யோகா நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல் மந்திரி, மத்திய மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்