தேசிய செய்திகள்

கங்கைப்படுகையின் நிலத்தடி நீர் பற்றி ஆராய அரசு குழுவை அமைக்கிறது

கங்கைப்படுகையின் நிலத்தடி நீர் பற்றி ஆராய அரசு குழுவை அமைக்கிறது என்று மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.

புது டெல்லி

இக்குழுவில் மத்திய நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் கிராம மேம்பாட்டுத்துறை செயலாளர்கள் கொண்ட குழு நிலத்தடி நீர் மட்டத்தைக் குறித்து ஆராயும். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை உமா பாரதி செய்துள்ளார்.

கங்கைப்படுகையின் மீண்டும் வளப்படுத்திகொள்ளும் ஆற்றலுடைய நிலத்தடிநீர்மட்டத்தின் அளவு 170.99 பில்லியன் சதுர கன மீட்டர்களாகும். இந்த அளவானது நாட்டின் மொத்த மறுவளம் பெறக்கூடிய ஆற்றலுடைய நிலத்தடி நீர்மட்டமான 433 பில்லியன் கன அடியில் 40 விழுக்காடாகும்.

இக்குழு விரைவில் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டப் பிரச்சினை குறித்து தீவிரமாக ஆராயும். மக்கள் துளசி, குழல் மரம், வேப்ப மரம், பலாசம் மரம் மற்றும் அசோக மரம் போன்றவற்றை நட வேண்டும் அதன் மூலம் நிலத்தடி நீரை மறுபடியும் ஊற்றெடுக்க வைக்க வேண்டும் என்று உமா பாரதி கூறினார். பிளாஸ்டிக் பைகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், நீராதாரங்களை சேமிக்க பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரத்தை துவங்கவும் வேண்டுகோள் விடுத்தார். அது மட்டுமின்றி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் தன்னார்வலர்களாக பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு