அகமதாபாத்
குஜராத் மாநிலம் வதோதராவின் பவமன்புரா பகுதியில் இன்று அதிகாலை புதிதாக கட்டிக்கொண்டு இருந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் இடைபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கட்டிடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன.
மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த கட்டிடம் 30 ஆண்டுகள் பழமையானது மற்றும் புதுப்பிக்கப்பட்டு வருவதாக உள்ளூரை சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை மொஹாலியின் தேரா பாஸ்ஸி பகுதியில் இரண்டு மாடி வணிக கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிட தக்கது.