தேசிய செய்திகள்

குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 6 மாதம் சிறை தண்டனை

குஜராத் பல்கலைக்கழக சட்டக் கட்டிடத்தின் பெயரை மாற்றக் கோரி போராடிய வழக்கில், ஜிக்னேஷ் மேவானிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆமதாபாத்,

குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, கடந்த 2016-ம் ஆண்டு குஜராத் பல்கலைகழகத்தின் சட்ட கட்டிடத்தின் பெயரை மாற்றக்கோரி போராட்டம் நடத்தினார். அந்த கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்க கோரி போராட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக ஜிக்னேஷ் மேவானி மற்றும் தலித் அமைப்புகளை சேர்ந்த 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை அகமதாபாத் மெட்ரோ போலீஸ் கோர்ட்டு விசாரித்து வந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் தலித் அமைப்புகளை சேர்ந்த 18 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து அகமதாபாத் மெட்ரோ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவர்கள் மேல்முறையீடு செய்வதற்காக அடுத்த மாதம் 17-ந் தேதி வரை அவர்களின் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுயேச்சை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிக்னேஷ் மேவானி கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு