தேசிய செய்திகள்

ஹஜ் இல்லங்களை கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக சிகிச்சை மையங்களாக மாற்றம்

ஹஜ் இல்லங்களை கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக சிகிச்சை மையங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஹஜ் கமிட்டி இல்லங்களை கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக சிகிச்சை மையங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

ஹஜ் இல்லங்களை தற்காலிக சிகிச்சை மையங்களாக பயன்படுத்த அந்தந்த மாநில அரசுக்கு வழங்க சிறுபான்மை விவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

குஜராத், கர்நாடகம், கேரளம், டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், மராட்டியம், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, ராஜஸ்தான், பீகார், திரிபுரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள ஹஜ் இல்லங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு