தேசிய செய்திகள்

அரியானா உள்துறை மந்திரி உடல்நலம் பற்றி நேரில் விசாரித்த பிரபல மல்யுத்த வீரர்

பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளி அரியானா உள்துறை மந்திரியை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார்.

சண்டிகார்,

இந்தியாவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் திலீப் சிங் ராணா. பஞ்சாப் போலீசில் அதிகாரியாக பணியாற்றிய இவர் பின்பு கடந்த 2000ம் ஆண்டு, டபிள்யூ.டபிள்யூ.இ. எனப்படும் தொழில் முறை மல்யுத்த போட்டியில் முதன்முறையாக கலந்து கொண்டார்.

கிரேட் காளி என்ற பெயரில் ரசிகர்களிடையே பிரபலமடைந்துள்ள இவர், டபிள்யூ.டபிள்யூ.இ. சாம்பியன் பட்டம் வென்றுள்ளதுடன், 4 ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் 2 பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.

இவர் சண்டிகாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரியானா உள்துறை மந்திரி அனில் விஜ்ஜை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார்.

கடந்த ஞாயிற்று கிழமை ஆக்சிஜன் அளவு குறைந்த நிலையில், அனிலை மருத்துவமனையில் சேரும்படி மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அவருக்கு அறிவுறுத்தி இருந்தது.

அரியானா முதல் மந்திரி கட்டார், பாஜ.க. தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர் ஆகியோரும் நேரில் சென்று விஜ்ஜிடம் அவரது உடல்நலம் பற்றி கேட்டறிந்து உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்