புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் முதல் மந்திரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக இருப்பவர் மல்லாடி கிருஷ்ண ராவ்.
புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை காண்பதற்காகவும், மருத்துவமனையில் செய்து தரப்பட்டு இருக்கும் வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காகவும் புதுச்சேரி சுகாதார துறை அமைச்சர் இன்று வருகை தந்துள்ளார்.
அவருடன் அதிகாரிகளும் உடன் சென்றனர். கொரோனா வார்டில் செல்வதற்கான பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டு சென்ற அவர், கொரோனா வார்டில் இருந்த கழிவறை ஒன்றை சுத்தம் செய்துள்ளார். அதன்பின்னர் அவர் அங்கிருந்து சென்றார். இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.