தேசிய செய்திகள்

அயோத்தி விவகாரம்: 18-ந்தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய மத்தியஸ்த குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அயோத்தி விவகாரம் தொடர்பாக 18-ந்தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்தியஸ்த குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

அயோத்தி ராமஜென்ம பூமியில் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 அமைப்புகள் பங்கிடுவது தொடர்பான அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இவைகளை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, இதுபற்றி கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுப்பதற்காக ஒரு மத்தியஸ்த குழுவை அமைத்தது.

இதற்காக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான அந்த குழுவுக்கு ஆகஸ்டு 15-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சமரசக்குழு சரியாக செயல்படவில்லை என இந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்து இருந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அயோத்தி பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் பராசுரன் கோரிக்கை வைத்தார். இதற்கு , மத்தியஸ்த குழு முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்யும் வரை, காத்திருக்கலாமே என நீதிபதிகள் பதில் அளித்தனர்.

அயோத்தி பிரச்சினையை தீர்க்க தான், மத்தியஸ்த குழுவை நாங்கள் அமைத்தோம். அயோத்தி வழக்கில் வரும் வியாழக் கிழமைக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்தியஸ்த குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

விரிவான அறிக்கையை ஜூலை 25-க்குள் சமர்ப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட் மத்தியஸ்த குழுவிடம் கேட்டுள்ளது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்