தேசிய செய்திகள்

கனமழை எச்சரிக்கை: அசாமில் கம்ரூப் மாவட்டத்தில் கல்வி நிலையங்களை நாளை ஒரு நாள் மூட உத்தரவு

அசாமில் கம்ரூப் மாவட்டத்தில் கனமழையை முன்னிட்டு நாளை ஒரு நாள் அனைத்து கல்வி நிலையங்களையும் மூடும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

கவுகாத்தி,

அசாமில் கம்ரூப் மாவட்டத்தில் நாளை கன மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்து உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒரு நாள் மூடும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகளை நடத்த விதிவிலக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு கம்ரூப் மாவட்ட பேரிடர் மேலாண் கழகத்தின் துணை ஆணையாளர் மற்றும் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அசாமில் 25 மாவட்டங்கள் வெள்ளம் நில சரிவுகளால் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளன. 11.09 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்