தேசிய செய்திகள்

கேரளாவில் டவ்தே புயல் தாக்கத்தால் கனமழை; மரங்கள், மின்கம்பங்கள் சேதம் - மீட்புபணிகள் தீவிரம்

டவ்தே புயலால் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் டவ்தே புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் புகுந்து பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. பல வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. அவற்றில் சில வீடுகள் இடிந்து தரைமட்டமானது.

இந்நிலையில், கேரளாவில் டவ்தே புயலால் கடலோர மாவட்டங்களில் இன்றும் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது,. இதனால் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு, அம்பலபுழா,மராரிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்,. மேலும் அறுந்து விழுந்த மின் இணைப்புக்களை சரி செய்யும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு