தேசிய செய்திகள்

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - மக்கள் அவதி

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் அவதியடைந்தனர்.

ஜம்மு,

காஷ்மீரில் இந்த பனிக்காலத்தில் நேற்று தான் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இந்த பனிப்பொழிவால் காஷ்மீர் மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்று காஷ்மீரில் மைனஸ் 4.1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. அது கடந்த 17-ந் தேதி மைனஸ் 4.4 டிகிரி செல்சியசாக இருந்தது.

காஷ்மீரில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு வெப்ப நிலை மைனஸ் 5.3 டிகிரி செல்சியசாக இருந்தது. அது முந்தையநாள் இரவு மைனஸ் 6.7 டிகிரி செல்சியசாக இருந்தது. இது காஷ்மீர் மாநிலம் முழுவதும் இருந்தது.

பனிகாரணமாக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் லடாக்-முகால் சாலை நேற்று மூடப்பட்டது. அங்கு ஒருவழிப்பாதையில் போக்குவரத்து நடந்தது.

இதேபோன்று உத்தரபிரதேசம், முஷாபாநகர் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அங்கு மைனஸ் 1.6 டிகிரி செல்சியசாக வெப்பநிலை இருந்ததால் கடும் குளிர் வாட்டி வதைத்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு