தேசிய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் பழங்குடியின பெண் கண்டெடுத்த உயர்தர வைரம்

பழங்குடியின பெண் கண்டெடுத்த உயர்தர வைரம் பல லட்சத்துக்கு ஏலம் போகும் என தெரிகிறது.

தினத்தந்தி

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் வைரச் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தின் குறிப்பிட்ட பகுதியை ராஜ்பூரில் வசிக்கும் வினிதா கோண்ட் என்ற பழங்குடியின பெண் மற்றும் சிலர் குத்தகைக்கு எடுத்து வைரம் தேடி வந்தனர். அப்போது வினிதா 3 வைரங்களை கண்டெடுத்தார். அவை 1.48 காரட் மற்றும் 20 சென்ட் மற்றும் 7 சென்ட் எடை கொண்டது. அந்த வைரங்கள் ஏலம் விடப்படும். அவை பல லட்சத்துக்கு ஏலம் போகும் என தெரிகிறது. வைர வியாபாரி அனுபம்சிங் இதுகுறித்து கூறும்போது, இந்த வைரங்களில் ஒன்று உயர்தரம் மிக்கது. மற்ற இரண்டும் குறைந்த தரம் கொண்டவை என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது