தேசிய செய்திகள்

இமாச்சலப்பிரதேசத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அரசு முடிவு

இமாச்சலப்பிரதேசத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிம்லா,

இமாச்சலப்பிரதேசத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்-லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இமாச்சலப்பிரதேசத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,தற்போது மாநிலத்தில் கொரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி ஆகஸ்ட் 2 முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்க முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆகஸ்ட் 2 முதல் பாடம் சம்பந்தமான சந்தேகம் கேக்க பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜூலை 26 முதல் பயிற்சி, கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிப்பது தொடர்பான முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்