நிதி ஆயோக் உறுப்பினர் (வேளாண்மை) ரமேஷ் சந்த் 
தேசிய செய்திகள்

தேவைப்படும் அனைவருக்கும் மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்குவது எப்படி? மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை

நாடு முழுவதும் தேவைப்படும் அனைவருக்கும் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்குவதை உறுதி செய்வது குறித்த கொள்கை நடவடிக்கைகளை மத்திய உணவு அமைச்சகத்துக்கு வழங்கியிருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் (வேளாண்மை) ரமேஷ் சந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தங்களுக்கு மானிய விலை உணவு தானியங்கள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மாநிலங்கள் கேட்பதாக உணவு அமைச்சகம் எங்களிடம் தெரிவித்தது. இதில் உணவு மானியம் மிகவும் விரைவான விகிதத்தில் உயர்வதாக அமைச்சகம் கவலை தெரிவித்தது. எனவே என்ன வகையான கொள்கை நடவடிக்கைகளை பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என ஆய்வு செய்தோம். அதன்படி மத்திய அரசின் நிதி ஆதாரங்களை பாதிக்காமல், தேவைப்படுபவர்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதை உறுதி செய்ய பல்வேறு வழிகள் பரிந்துரைக்கப்பட்டன.

அதேநேரம் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலை உணவு தானியங்களை குறைப்பதாக உணவு அமைச்சகம் கூறவில்லை. எனவே நிதி ஆயோக் வெவ்வேறு வழிகளை உருவாக்கியது. அதில் ஒன்று, 3-ல் 2 பங்கினருக்கு (67 சதவீத மக்கள்) மானிய விலை உணவு தானிய வினியோகத்தை தொடர கூறியது.

இவ்வாறு ரமேஷ் சந்த் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்