புதுடெல்லி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, சர்வதேச அளவில் விமான சேவை முடங்கி உள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் நடப்பாண்டில் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை சுமார் 86. 5 சதவீதமும், சர்வதேச விமானப்போக்குவரத்து சேவை சுமார் 97 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2023ம் ஆண்டில் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என கூறப்பட்ட நிலையில், 2024வரை தற்போதைய நிலை நீடிக்கலாம் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.