தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் இளையராஜா

இளையராஜா மாநிலங்களவை எம்.பி.ஆக நாளை பதவி ஏற்க உள்ளார்

தினத்தந்தி

புதுடெல்லி,

விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா,ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியற்றுக்கொண்டனர் .இளையராஜா பதவி ஏற்கவில்லை . அமெரிக்காவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.

இந்த நிலையில் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.ஆக நாளை பதவி ஏற்க உள்ளார்.இதற்காக அவர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.டெல்லி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு