தேசிய செய்திகள்

சிவமொக்காவில் லாரியில் டீசல் திருடிய 2 பேர் கைது

சிவமொக்காவில் லாரியில் டீசல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஓல்டுடவுன் பகுதியில் தனியார் பெட்ரோல் நிலையம் உள்ளது. இந்த பெட்ரோல் நிலையம் அருகே லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த லாரியில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து லாரி டிரைவர் மாவினகெரேவை சேர்ந்த மகேஷ் என்பவர் பத்ராவதி போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சிவமொக்கா திப்பு நகரை சேர்ந்த சோனு (வயது 24), நூருல்லா (25) என்று தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 150 லிட்டர் டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கைதான 2 பேர் மீதும் பத்ராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை