தேசிய செய்திகள்

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியில்லை - டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியில்லை என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

பெங்களூரு,

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று சந்தித்தார். அதன்பிறகு சிறை வளாகத்தில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பதிவு பணிகள் இன்னும் முடியவில்லை. சின்னம் பெற்றபிறகு தான் தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதனால் நடைபெற உள்ள 2 தொகுதி இடைத்தேர்தல்களிலும் (நாங்குநேரி, விக்கிரவாண்டி) போட்டியிட வாய்ப்பு இல்லை.

புகழேந்திக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்