லக்னோ,
உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மற்றும் சகாரன்பூர் மாவட்டங்களில் விற்கப்பட்ட விஷ சாராயத்தை ஏராளமானோர் வாங்கி குடித்தனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்ட அவர்களில் 21 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைப்போல உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லுபுர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பரிமாறப் பட்ட சாராயத்தை குடித்த 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.