தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இன்று மேலும் 45,230 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் இன்று புதிதாக மேலும் 45,230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,230 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணைக்கை 82,29,313 ஆக உயர்ந்துள்ளன,

இன்று காலை அறிவிக்கபட்ட 496 புதிய இறப்புகளுடன், நாட்டில் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 1,22,607 ஆக உயர்ந்து உள்ளது

கொரோனாவில் இருந்து மொத்தம் 75,44,798 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர், அதில் கடந்த 24 மணி நேரத்தில் 53,285 பேர் குணமடைந்துள்ளனர். இது தேசிய மீட்பு வீதத்தை 91.68 சதவீதமாக உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது. நாட்டில் தற்போது 5,61,908 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று வரை மொத்தம் 11,07,43,103 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று மட்டும் 8,55,800 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு