புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வந்தநிலையில் நேற்று 12 ஆயிரத்து 516 ஆக குறைந்தது. இதில் கேரளாவின் பங்களிப்பு மட்டுமே 7,224 ஆகும்.
இந்நிலையில் இந்தியாவில் இன்று மேலும் 11 ஆயிரத்து 850 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 ஆயிரத்து 850 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,26,036 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 555 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,63,245ஆக உயர்ந்துள்ளது. (இந்தியாவில் நேற்று முன்தினம் இந்த தொற்றால் 340 பேர் பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை அதிரடியாக 501 ஆக உயர்ந்தது. இதற்கு காரணம், வழக்கம்போல கேரள மாநிலம்தான். அங்கு விடுபட்டுப்போன கொரோனா பலிகளை கணக்கில் சேர்த்து, நேற்றைய பலி எண்ணிக்கை 419 என காட்டப்பட்டுள்ளது). இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.35 % ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12,403 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,26,483 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.26 % ஆக உள்ளது.
மேலும் நாடுமுழுவதும் கடந்த 274 நாட்களில் குறைந்தபட்ச அளவாக கொரோனா தொற்றுக்கு தற்போது 1,36,308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,11,40,48,134 பேக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,42,530 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.