தேசிய செய்திகள்

இந்தியாவில் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு ...!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதத்திற்கு பிறகு குறைந்த அளவாக புதிதாக 6,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்துக்கு கீழ் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதத்திற்கு பிறகு குறைந்த அளவாக புதிதாக 6,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ( அதில் கேரளாவில் மட்டும் 3,382 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது).

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 990 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,87,822 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 190 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,68,980 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.36 % ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10,116 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,18,299 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.35 % ஆக உள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,00,543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,23,25,02,767 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,80,545 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 7,01,19,723 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 10,12,523 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 64,13,03,848 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்