புதுடெல்லி,
இங்கிலாந்து நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இதற்கிடையே உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 23-ந்தேதி முதல் நாளை வரை 9 நாட்கள் இங்கிலாந்து உடனான விமான சேவையை தற்காலிகமாக மத்திய அரசு ரத்துசெய்து உத்தரவிட்டது. இதன்படி இங்கிலாந்தில் இருந்து விமானங்கள் இந்தியா வருவதற்கு, இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு விமானங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நிலையில், இங்கிலாந்து உடனான விமான சேவை தடை மேலும் நீட்டிக்கப்படலாம் என விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவித்து உள்ளார்.