தேசிய செய்திகள்

இந்திய கொரோனா தடுப்பூசிகள் 24 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகள் இதுவரை 24 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர். வி.கே. பால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கொரோனா தடுப்பூசி திட்டத்தில் அடைந்துள்ள முன்னேற்றம் ஆனது நாட்டில் பெரிய திருப்தியை கொண்டு வந்துள்ளது.

நாட்டில் இதுவரை 90 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகள் இதுவரை 24 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு