தேசிய செய்திகள்

நேதாஜியின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு ம‌ம்தா பானர்ஜி கோரிக்கை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தா,

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது;-

நேதாஜியின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். ஒட்டுமொத்த தேசமும் தேசிய தலைவருக்கு மரியாதை செலுத்தவும், தேக் நாயக் திபாசை பொருத்தமான முறையில் கொண்டாடவும் அனுமதிக்க வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் நேதாஜி பற்றிய அட்டவணை காட்சிப்படுத்தப்படும். மேற்கு வங்காளத்தின் அணி வகுப்பு ஊர்தியை நிராகரித்ததன் மூலம் மேற்கு வங்காளத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மத்திய அரசு கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும்என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்