தேசிய செய்திகள்

இன்று சர்வதேச யோகா தினம்1 கோடி பேர் சூரிய நமஸ்காரம்-மத்திய மந்திரி நம்பிக்கை

சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

புதுடெல்லி,

சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய கலாசாரம், சுற்றுலா துறை மந்திரி பிரகலாத் படேல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், சர்வதேச யோகா தினத்தையொட்டி நான் புராண கிலாவில் சூரிய நமஸ்காரம் செய்வேன். அப்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து, என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி யோகா தினத்தை உலகுக்கு பரிசாக வழங்கியுள்ளார். நாம் நமது அன்றாட வாழ்வில் யோகா பயிற்சி செய்வோம் என கூறி உள்ளார்.

அவர் சமூக வலைத்தளம் ஒன்றில் ஒரு வீடியோ செய்தியும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் இன்று காலை 7 மணிக்கு தன்னுடன் 1 கோடிப்பேர் சூரிய நமஸ்காரத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறி உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்