தேசிய செய்திகள்

மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது

நிரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது கடந்த சில மாதங்களுக்கு முன் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சியின் நெருங்கிய கூட்டாளி தீபக் குல்கர்னியையும் இந்த வழக்கில் தேடி வந்தனர். கடந்த மாதம் ஹாங்காங்கில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி சி.பி.ஐ. அமைப்பு இன்டர்போலுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த வேண்டுகோளை ஏற்று மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் ஒன்றை பிறப்பித்துள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு