தேசிய செய்திகள்

ஜே.இ.இ. மெயின் 4ஆம் கட்ட தேர்வு தேதி மாற்றம் - மத்திய மந்திரி அறிவிப்பு

ஜே.இ.இ. மெயின் 4ஆம் கட்ட தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜே.இ.இ. மெயின் 4 ஆம் கட்ட தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திரபிரதான் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

மாணவர்களின் கோரிக்கை ஏற்று, தேர்வர்களின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஜே.இ.இ. மெயின் 3 மற்றும் 4 ஆம் கட்ட தேர்வுக்கான இடைவெளியை 4 வாரங்களாக அதிகரிக்க தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஜே.இ.இ. மெயின் 4 ஆம் கட்ட தேர்வுகள் ஆகஸ்ட் 26,27,28 ஆகிய தேதிகள் மற்றும் செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெறும். ஜே.இ.இ. மெயின் 4 ஆம் கட்ட தேர்வு எழுத ஏற்கனவே 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

ஜே.இ.இ. மெயின் 4 ஆம் கட்ட தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதன் கால அவகாசம் ஜூலை 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது