தேசிய செய்திகள்

போலீஸ்காரர் சுட்டுக்கொலை - மனைவி, காதலன் உள்பட மூவர் கைது

போலீஸ்காரர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி, காதலன் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் ராம்கார்கை சேர்ந்தவர் பங்கஜ் குமார் (வயது 28). ஹசரிபக் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இரவு பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் பங்கஜ் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் பங்கஜ் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதில் போலீஸ்காரர் பங்கஜ் குமாரை அவருடைய மனைவியே தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. அவர் தீட்டிய சதியின்படி அவருடைய காதலன் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இந்த வழக்கில் பங்கஜ் குமாரின் மனைவி, அவருடைய காதலன், மற்றுமொருவர் ஆகிய மூவரை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்