தேசிய செய்திகள்

பஞ்சாபில் கங்கனா ரனாவத்தின் கார் விவசாயிகளால் முற்றுகை

இமாச்சல பிரதேசத்தில் இருந்து பஞ்சாப்பிற்கு வந்த கங்கனா ரனாவத்தின் கார் முற்றுகையிடப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ்,

இமாச்சல பிரதேசத்தில் இருந்து பஞ்சாப்பிற்கு வந்த கங்கனா ரனாவத்தின் கார் முற்றுகையிடப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது குறித்து கடுமையாக கங்கனா ரனாவத் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், பஞ்சாபின் கிர்தாட்பூர் சாஹிப் வழியாக காரில் சென்ற கங்கனா ரனாவத்தின் கார் விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டது. விவசாயிகளுக்கு எதிரான கருத்துக்கு கங்கனா ரனாவத் மன்னிப்பு கோர வேண்டும் என காரை முற்றுகையிட்ட விவசாயிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது.

தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளில் குழுவில் இருந்த பெண்களுடன் கங்கனா ரனாவத் பேசினார். அதன்பிறகு ஏற்பட்ட சமாதானத்தையடுத்து அங்கிருந்து கங்கனா ரனாவத் புறப்பட்டுச்சென்றார்.

விவசாயிகள் முற்றுகையிட்டது தொடர்பாக இன்ஸ்டாகிரமில் விடீயோ ஒன்றை வெளியிட்ட கங்கனா ரனாவத், நான் பஞ்சாபிற்குள் நுழைந்தபோது, ஒரு கும்பல் எனது காரை முற்றுகையிட்டது. என்னை திட்டியதோடு என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர்.

பொது இடத்தில் நடைபெற்ற கும்பல் தாக்குதல் இது. எனக்கு பாதுகாப்பு இல்லை என்றால் என்ன நடைபெற்றிருக்கும்? இங்கிருக்கும் சூழல் நம்ப முடியாத வகையில் உள்ளது. நான் என்ன அரசியல்வாதியா? இது என்ன நடத்தை? என விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு