பெங்களூரு:
ஊழல் வழக்கு தொடர்பாக பெங்களூரு மற்றும் மும்பையில் உள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சிபிஐ சோதனை குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,
"இது மோடி-எடியூரப்பாவின் மிரட்டல் மற்றும் சூழ்ச்சிகளின் நயவஞ்சக விளையாட்டு. சிபிஐ ரெய்டு செய்வதன் மூலம் சிபிஐ கைபாவையாக நினைத்து செயல்படுத்து கிறார்கள். எடியூரப்பா அரசாங்கத்தில் ஊழல் அடுக்குகளை சிபிஐ கண்டுபிடிக்க வேண்டும். "
ஆனால், சோதனை ராஜக்கள் மோடி மற்றும் எடியூரப்பா அரசாங்கங்கள் மற்றும் பாஜகவின் முன்னணி அமைப்புகள், அதாவது சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை ஆகியவைக்கு முன் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் தலைவணங்கமாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். மக்களுக்காகப் போராடுவதற்கும், பாஜகவின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்துவதற்கும் எங்கள் எண்ணம் வலுவடைகிறது, "என்று சுர்ஜேவாலா கூறினார்.