தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றியும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் முதல்-மந்திரி எடியூரப்பா, சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாவது:-

கர்நாடகவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்படுகிறது. இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு