தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மத வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி

பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கவும் அனுமதி அளித்து கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அம்மாநிலத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நாளை முதல் மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு வரும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், திருவிழாக்கள், மத ஊர்வலங்கள் ஆகியற்றிற்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கவும் அனுமதி அளித்து கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்