ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். இதில், சமீபத்தில் பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய, ஸ்ரீநகரை சேர்ந்த ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றுள்ளனர்.
அவர் ஷாகித் பசீர் ஷேக் என அடையாளம் காணப்பட்டு உள்ளார் என காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்து உள்ளார். சமீபத்தில் முகமது சபி தார் என்ற நபர் ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், பயங்கரவாதியிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி, வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.