பனாஜி
கணைய பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் ஏறக்குறைய மூன்று மாதம் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்ட கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியா திரும்பினார். கோவா சென்ற முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் நேற்று முதல் தனது பணிகளை துவங்கினார்.
இந்த நிலையில், மனோகர் பாரிக்கருக்கு வாழ்த்து தெரிவித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள செய்தியில், நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.