தேசிய செய்திகள்

கர்நாடகா எல்லைகளை மூடிய விவகாரம்: மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் - பினராயி விஜயன்

கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், கேரளாவின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகா, கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கேரளாவுடனான எல்லைகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கர்நாடகாவின் இந்த நடவடிக்கை மத்திய அரசின் ஊரடங்கு தளர்வுகளை மீறும் செயல் என கேரளாவில் விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா எல்லைகளை மூடிய விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றார். பினராயி விஜயன் மேலும் கூறும் போது, ஆர்டி- பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கர்நாடகாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என கர்நாடக டிஜிபி உறுதி அளித்துள்ளார்என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது