தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் ; பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட ஜீசஸ் சபை

கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு அவரது அடையாளத்தை வெளிபடுத்தி உள்ளது மிஷினரிஸ் ஆஃப் ஜீசஸ் சபை.

கொச்சி,

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை கற்பழித்ததாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த புகாரை வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும், வழக்கை நீர்த்து போகச்செய்ய போலீசார் முயல்வதாகவும் கூறி கொச்சியில் கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் 19ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜலந்தரில் இருக்கும் மிஷினரிஸ் ஆஃப் ஜீசஸ் சபை, கன்னியாஸ்திரியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதாகவும், அதில் கன்னியாஸ்திரி மேலும் 9 பேருடன் இணைந்து பிஷப்புக்கு எதிராக சதி செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளது. புகார் அளித்த கன்னியாஸ்திரியின் நண்பர்களே, தேவாலய வருகை பதிவேட்டை கையாண்டவர்கள் என்றும் அதில் முறைகேடு நடந்திருக்க கூடும் என்றும் அந்தச் சபை கூறியுள்ளது.

கன்னியாஸ்திரி சிசிடிவியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ள அந்தச் சபை, கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறும் 2015ம் ஆண்டு மே 23ஆம் தேதி பிஷப் பிராங்கோ வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததற்கான புகைப்பட ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்