தேசிய செய்திகள்

கர்நாடகத்திற்கு வரும் கேரள மாணவர்கள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர உத்தரவு

கர்நாடகத்திற்கு வரும் கேரள மாணவர்கள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கேரள மாணவர்களை கவனத்தில் கொண்டு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வரும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கொரோனா நெட்டிவ் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும். அது 72 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கேரளாவில் இருந்து கடந்த 15 நாட்களில் கர்நாடகம் வந்த மாணவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அங்கிருந்து வரும் மாணவர்கள், வந்த நாளில் இருந்து 7-வது நாளில் மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கல்லூரிகளில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தால், உடன் இருக்கும் மாணவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை கர்நாடகத்தில் உள்ள கல்லூரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு