தேசிய செய்திகள்

‘கொலிஜியம்’ பரிந்துரையை திருப்பி அனுப்பியது, இதுவரை இல்லாதது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து

‘கொலிஜியம்’ பரிந்துரையை திருப்பி அனுப்பியது, இதுவரை இல்லாதது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப் கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொச்சி,

உத்தரகாண்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

ஆனால் இந்த நியமனத்தை மறு ஆய்வு செய்யுமாறு கூறி, கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இது குறித்து கடந்த 2-ந் தேதி கூடி விவாதித்த கொலிஜியம் நீதிபதிகள், பின்னர் முடிவு எதுவும் எடுக்காமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் கொலிஜியத்தின் பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டது முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கொலிஜியம் பரிந்துரை விவகாரத்தில் நடக்கக்கூடாதது நடந்திருக்கிறது. அதுதான் பொதுவான எண்ணம் என்றார்.

கொலிஜியம் பரிந்துரைக்கும் பெயரை திருப்பி மத்திய அரசு திருப்பி அனுப்பியது முன்னெப்போதும் இல்லாதது என்று கூறிய குரியன் ஜோசப், இந்த விவகாரத்தில் மேலும் விரிவான விவாதங்கள் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்