தேசிய செய்திகள்

புனே மக்களவை தொகுதிக்கு நடிகை மாதுரி தீட்சித்? பா.ஜ.க. தீவிர பரிசீலனை

வருகிற 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான புனே மக்களவை தொகுதிக்கு நடிகை மாதுரி தீட்சித் பெயரை பா.ஜ.க. பரிசீலனை செய்து வருகிறது.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2019ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் புனே மக்களவை தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் நடிகை மாதுரி தீட்சித் பெயர் இடம் பெற்றுள்ளது.

மும்பையில் இந்த வருடம் ஜூனில் அக்கட்சிக்காக ஆதரவு திரட்டும் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ஈடுபட்டார். அப்பொழுது, தீட்சித்தின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து மோடி அரசின் சாதனைகளை பற்றி விளக்கினார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் மாநில மூத்த தலைவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பல்வேறு மக்களவை தொகுதிகளுக்கான பெயர்கள் அடங்கிய இறுதி பட்டியலை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதில், புனே மக்களவை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் நடிகை மாதுரி தீட்சித் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரது பெயர் தீவிர பரிசீலனையில் உள்ளது என தெரிவித்து உள்ளார்.

51 வயது கொண்ட நடிகை மாதுரி தீட்சித் ஹம் ஆப்கே ஹெயின் கோன், சாஜன் மற்றும் தில் தோ பாகல் ஹை உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவைக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை விட 3 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று பா.ஜ.க.வின் அனில் ஷிரோல் வெற்றி பெற்றார்.

உள்ளாட்சி தேர்தல்களில் குஜராத் மற்றும் டெல்லியில் புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்து தொகுதிகளை கைப்பற்றும் யுக்தியானது மோடியால் அமல்படுத்தப்பட்டது என மூத்த பா.ஜ.க. உறுப்பினர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு