தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 2 ஆம்புலன்சுகள் மோதல்; கர்ப்பிணி உள்பட 5 பேர் காயம்

மத்திய பிரதேசத்தில் 2 ஆம்புலன்சுகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் கர்ப்பிணி உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நேற்றிரவு கர்ப்பிணி ஒருவரை ஏற்றி கொண்டு ஆம்புலன்சு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிரே வந்த மற்றொரு ஆம்புலன்சு மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் கர்ப்பிணி உள்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆபத்து கட்டத்தினை கடந்து விட்டனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது