தேசிய செய்திகள்

மின்விநியோகம் இல்லாததால் மராட்டிய சட்டப்பேரவை ஒத்திவைப்பு

மின்விநியோகம் இல்லாததால் மராட்டிய சட்டப்பேரவையை ஒரு மணி நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார். #HeavyRain

நாக்பூர்,

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மாநிலத்தலைநகரான மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. நேற்று இரவு பெய்த பலத்த மழையால், தாழ்வான இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மராட்டிய மாநில சட்டப்பேரவை அமைந்துள்ள நாக்பூரிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால், விதன் பவனிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், சட்டப்பேரவைக்கு மின்விநியோகம் அளிக்கும் பிரதான ஸ்விட்ச் பாக்ஸ் பகுதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால், பேரவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஹரிபாவு பாக்டே தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்