தேசிய செய்திகள்

புதுமண தம்பதியினரின் செல்பி மோகம் - ஆற்றில் மூழ்கி பலியான சோகம்!

இல்லற வாழ்க்கை தொடங்கும் முன்னரே மண்ணுலக வாழ்க்கையை விட்டு உயிரிழந்த சோக சம்பவம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது.

மும்பை,

மொபைல் போனில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு, திருமணமாகி இல்லற வாழ்க்கை தொடங்கும் முன்னரே மண்ணுலக வாழ்க்கையை விட்டு உயிரிழந்த சோக சம்பவம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது.

புதுமண தம்பதியினர் செல்பி எடுக்கும்போது தவறி விழுந்து ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட சோகம் மராட்டிய மாநிலம் காவாத் பகுதியில் அரங்கேறியுள்ளது. மும்பையிலிருந்து 385 கி.மீ தொலைவில் உள்ள காவாத் கிராமம் பீத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த விபத்தில் புதுமண தம்பதியினரும், அவர்களுடைய நண்பரும் சேர்ந்து பலியாகினர்.இறந்தவர்கள் தாஹா ஷேக் (20), அவரது கணவர் சித்திக் பதான் ஷேக் (22), மற்றும் அவரின் நண்பர் ஷஹாப் என கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களது உடல்கள் சனிக்கிழமையன்று ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன.

ஆற்றில் விழுந்த ஒருவரை மற்றொருவர் காப்பற்ற எண்ணி இப்படி, ஒருவரையொருவர் காப்பாற்றுவதற்கான முயற்சியில் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

வாட்வானி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த் ககுரா கூறும்போது, மூன்று தனித்தனி விபத்து இறப்பு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்