கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,702 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் நேற்று புதிதாக 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மும்பை,

மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி பதிவாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று முன் தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது.

இந்த நிலையில், மராட்டியத்தில் இன்று புதிதாக 8,702 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 29 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,744 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 12 ஆயிரத்து 367 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று மேலும் 56 பேர் உயிரிழந்தநிலையில், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 51,993 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 64,260 ஆக உள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு