மனோஜ் சின்ஹா (பிடிஐ) 
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரீஷ் சந்திர முர்மு தனது பதவியை ராஜினாமா செய்ததாக நேற்று தகவல்கள் வெளியானது. தனது ராஜினாமா கடிதத்தையும் ஜனாதிபதிக்கு கிரிஷ் சந்திர முர்மு அனுப்பி விட்டதாகவும் கூறப்பட்டது. எனினும், இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில், கிரிஷ் சந்திர முர்மு ராஜினாமா செய்ததை உறுதி படுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிரிஷ் சந்திர முர்மு - வின் ராஜினாமா கடிதத்தை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்துள்ளார்.

61-வயதான மனோஜ் சின்ஹா உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். காசியாப்பூர் மக்களவை தொகுதியில் பாஜகவில் சார்பில் போட்டியிட்ட இவர் மூன்று முறை எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார். ரெயில்வே மற்றும் தொழில்நுட்ப துறையில் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது