தேசிய செய்திகள்

'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் மெகபூபா முப்தி?

’இந்தியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தவுள்ளனர். காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த கூட்டத்தை தவிர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது