தேசிய செய்திகள்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை மாநில அரசுகள் கண்டறிய வேண்டும் : உள்துறை அமைச்சகம்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை மாநில அரசுகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்கள் போலியாக பெற்றுள்ள இந்திய ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இன்று ராஜீவ் சந்திரசேகர் என்ற எம்.பி, பெங்களூருவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்காளதேச நாட்டவர்கள் பற்றி கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், உரிய பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பெற்றுள்ள இந்திய ஆவணங்களை பறிமுதல் செய்யவும், சட்டப்படி அவர்களை நாடு கடத்தும் பணிகளை துவங்க வேண்டும் என்றும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்