தேசிய செய்திகள்

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: 4-ந்தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி வரும் 4-ஆம் தேதி பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.

புதுடெல்லி,

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28-ஆம் தேதி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடங்கியது. இந்த விவாதத்திற்காக மொத்தம் 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில், மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், மாநிலங்களவையிலும், பாஜக எம்.பி. சதானந்தன் மாஸ்டர், மக்களவையிலும் தீர்மானத்தை முன்மொழிந்தனர். தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள் தாரிக் அன்வர், அமரீந்தர் சிங் ராஜா வாரிங், அன்டோ ஆண்டனி, ஜோதிமணி உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்று பேசுகின்றனர்.

Also read:நாடாளுமன்றம் கூடும் காலத்தை காங்கிரஸ் கட்சியும் மாற்றியமைத்திருக்கிறது: பாஜக பதிலடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி வரும் 4-ஆம் தேதி பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 11-ஆம் தேதி பதிலளித்து பேசுகிறார். இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் 13-ஆம் தேதி நிறைவடைகிறது. பின்னர் இரண்டாம் கட்ட கூட்டம் மார்ச் 9-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 65 நாட்களில் 30 அமர்வுகள் நடைபெறும் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப்ரல் 2-ஆம் தேதி முடிவடைகிறது.

புல்லட் ரெயில் பாதை: சென்னை-பெங்களூரு பயண நேரம் 1.13 மணி நேரமாக குறையும்

நாங்கள் வந்தால் டெல்லி காவல்துறையே பயப்படுகிறது: மம்தா பானர்ஜி

ஆதார் கார்டு விவரங்களை நீங்களே லாக் செய்யலாம்: எப்படி தெரியுமா?

சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி பேச்சு: மக்களவையில் பாஜக எம்.பிக்கள் அமளி

நாடாளுமன்றத்தில் அமளி - பிற்பகல் 3 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு